சூ. 61 :க த ந ப ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே

(28)
 

க-து:

மொழிமுதற்கண் மெய்கள் உயிர்மெய்யாகவே வருமென்றதனான்
அவை   வருமாறு  கூறத்தொடங்கி  இச்சூத்திரத்தான்  எல்லா
உயிரொடும் வருவன இவை எனக் கூறுகின்றார்.
 

பொருள்:  க த ந ப ம  என்னும்  ஐந்து  மெய்களும்  ஒவ்வொன்றும்
பன்னிரண்டு  உயிரிசைகளோடு  கூடி   முதலாதற்குச்   செல்லும்.   உயிர்
என்றது உயிரெழுத்தின் இசையினை. ஆர்-அசை.
 

எ-டு:   கனி, கானல், கிணை, கீரி,  குவளை,  கூந்தல்,  கெண்டை,
கேளிர், கைதை, கொடை,  கோடல்,  கௌவை  எனவும்,  தளை,  தாழை,
திங்கள்,  தீனி,   தும்பை,   தூணி,    தெவ்வர்,     தேவர்,   தையல்,
தொண்டு-தோள்  தௌவை எனவும், நளி, நாரை,  நிலம்,  நீளம்,  நுங்கு,
நூல், நெற்றி, நேயம்,  நைவளம்,  நொய்யல்,  நோன்பு,  நௌவி எனவும்,
பழம், பாகன், பிறை, பீடு, புரை, பூழி, பெடை, பேடை,  பைதல், பொருப்பு,
போர்வை, பௌவம்  எனவும்,  மழை,  மாடம்,  மின்னல்,  மீளி,  முருகு,
மூக்கு,  மெய்,  மேவல்,  மையல்,  மொழி,  மோனை,  மௌவல் எனவும்
வரும்.