உஊ ஒஓ என்னும் நான்குயிர்
(30)
க-து:
பொருள்: வகரமென்னும் மெய்யெழுத்து உஊஒஓ என்னும் நான்குஉயிரிசைகளொடு கூடிமொழிக்கு முதலாக வருதலில்லை. ஏனையெட்டொடும்கூடிவரும் என்றவாறு. ஒடுவை உயிரொடு கூட்டுக.
எ-டு: வளை, வானம், விரல், வீடு, வெள்ளம், வேந்தன், வையம்,வௌவுதல் எனவரும்.