|
சூ. 64 : | ஆஎ, | | ஒஎனும் மூவுயிர் ஞகாரத் துரிய | (31) | க-து: | ஞகரமெய் மூன்று உயிரிசைகளொடு கூடிவரும் என்கின்றது. | பொருள்: ஞகாரம் என்னும் மெய் மொழிமுதலாதற்கு ஆ, எ, ஒ என்னும் மூன்று உயிரோசைகளும் உரியவாம். | ஞகாரத்‘துரிய’ எனவே உரிமையின்றி நகரமெய்யின் திரிபாக வரும் ஞகரத்திற்கு அகர இகர ஏகாரங்கள் சிறுபான்மை உரியவாதல் கொள்க. | எ-டு: ஞாலம், ஞெகிழி, ஞொள்கல் எனவரும். நகரத் திரிபாகிய ஞகரம்; (நரல) ஞரல (நமன்) ஞமன் (நிமிரு) ஞிமிரு (நேயம்) ஞேயம் ‘ஞிமிறு’ வண்டாயின் ‘‘கடிசொல்லில்லை’’ என்பதனாற் கொள்க. ஞமலி=நாய். |
|