சூ. 65 :ஆவோ டல்லது யகர முதலாது
(32)
 

க-து:

யகரமெய் மொழி முதலாமாறு கூறுகின்றது.
 

பொருள்:  யகரமெய் ஆ   என்னும்  உயிரிசையோடல்லது  ஏனைய
உயிரிசைகளொடு கூடிமொழி முதலாகாது. எ-டு யா, யாழ், யானை,யாங்கு
எனவரும்.  ‘யவனர்’  என்பது  திசைச்  சொல்.  யவன்  என்பது  யாவன்
என்பதன்  விகாரம்.  இனி,  யூபம்  என்னும்  “எழுத்தொடு    புணர்ந்த’’
வடசொல் புறனடையாற் கொள்ளப்படும். யுகம், யூகம், யோகம், யௌவனம்
முதலியவை இயையாது சிதைந்தனவாதலின் கொள்ளப்பெறா என்க.