சூ. 66 :முதலா ஏன தம்பெயர் முதலும் 
(33)
 

க-து:

எஞ்சிய மெய்களைப் பற்றியதொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள்:  உயிர்மெய்யாய் மொழி முதலாகா   எனக்கொள்ள  வைத்த
ஙடணரலழளறன என்னும் ஒன்பது மெய்களும்,  சில  உயிரிசைகளொடுவரா
என  மேல் விலக்கப்பெற்ற ஏனையவும் தம்பெயரைச் சுட்டி வழங்குமிடத்து
முதலாக வரும். முதலாவும் ஏனவும் என உம்மை விரிக்க.
 

எ-டு :  ‘‘சகரக்கிளவியும்’’  ‘‘ஞகாரை    ஒற்றிய   தொழிற்பெயர்’’
“ஙகாரம்  முதல்நா  அண்ணம்’’  ‘‘டகார  ணகாரம்  நுனிநா  அண்ணம்’’
‘‘ழகர  உகரம்  நீடிடன் உடைத்தே’’ ‘‘யவமுன்வரினே’’ ‘‘ஆவயின் னகரம்
ஒற்றா கும்மே’’ ‘‘நிற்றல்  வேண்டும்  ரகரப்  புள்ளி’’  ‘‘நான்கன்  ஒற்றே
லகார  மாகும்’’ ‘‘நான்கன் ஒற்றே றகார மாகும்”  “ளகார  இறுதி  ணகார
இயற்றே” (புள்ளி-101) எனவரும்.
 

இச்சூத்திரத்தாற்பயன்  அகரமுத  னகர இறுவாய் என்புழி நிலைமொழி
யீற்றுலகரம் கெடுதலும்  பெயர்,  வினைகட்கு  ஓதிய  புணர்ச்சிவிதிகளைப்
பெறுதலுமாம்.