சூ. 68 : | முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ(து) |
| அப்பெயர் மருங்கின் நிலையிய லான |
(35) |
க-து: | ‘நுந்தை’ என்னும் முறைப் பெயரின் பொருள் பற்றிய ஐயமகற்றுகின்றது. |
பொருள்: மேற்கூறிய குற்றியலுகரம் நுந்தை என்னும் பெயரிடத்து நிற்றலான் முற்றியலுகரத்தொடு பொருளான் வேறுபடாது. |
என்றது; ‘‘கதநபம எனும்’’ என்ற நூற்பாவான் நகரமெய் எல்லா உயிரொடும் செல்லும் என்றதனான் நகரமெய்யை ஊர்ந்து முற்றியலுகரமும் வருமன்றே? அவ்வழி அதுவும் ‘‘நுந்தை’’ என நிற்கும். அங்ஙனம் முற்றியலுகரம் ஊர்ந்து நிற்கும் நுந்தை என்பதும் குற்றியலுகரம் ஊர்ந்து நிற்கும் நுந்தை என்பதும் பெயர் ஆதலின் பொருள் வேறுபடாது என்றவாறு. |
இதனான் குற்றியலுகரச் சொல்லிற்கும் முற்றியலுகரச் சொல்லிற்கும் பொருள் வேறுபாடு உண்டென்பது புலப்படும். அஃதாவது மொழியிறுதிக் குற்றுகரச் சொல்லாயின் அஃது பெயராயே நிற்கும். முற்றுகரச் சொல்லாயின் வினையாயே நிற்கும். வினை என்றது முன்னிலை ஒருமை வினை என்பது பின்னர்ப் பெறப்படும். |
குற்றியலுகரம் | முற்றியலுகரம் | | | நாடு (ஊர்) | நாடு! (ஆராய்க) | காது (செவி) | காது! (கொல்வாயாக) | கட்டு (பொதி) | கட்டு! (பிணிப்பாயாக | கொத்து (துணர்) | கொத்து! (தோண்டுக) | நோக்கு (விழி) | நோக்கு! (காண்பாயாக) | நுங்கு (பனஞ்சுளை) | நுங்கு! (விழுங்குக) | ஒன்று (முதல் எண்) | ஒன்று! (இணைவாயாக) | முருகு (அழகு) | முருகு! (முதிர்வாயாக) | கடுகு (கடுகுவிதை) | கடுகு! (விரைவாயாக) | | |
|
ஏனைய ஆய்தத் தொடர்மொழி - இடைத்தொடர் மொழிகள் இவ்வாறு வருமேற் க ண்டுகொள்க. இங்ஙனம் வரும் குற்றுகரத்தை இதழ்குவியாமலும் முற்றுகரத்தை இதழ்குவித்தும் கூறி அரைமாத்திரையும் ஒருமாத்திரையுமாக இசைப்பதைச் செவியான் உணர்ந்து கொள்க. |