குற்றுயிர்கள் தனித்து ஈறாகா; அளபெடையின்கண் ஈறாகும் என்க. இனி “ஈரள பிசைக்கும் இறுதியில் உயிரே” (இடை-33) எனப்பின்னரும் வலியுறுத்துவார். ‘‘ஒள” என்பது குறிப்பிடைச் சொல்லாகவன்றிப் பெயராயும் வினையாயும் வாராமையான் ‘‘ஒள’’ எஞ்சிய இறுதியாகும் என்றார். இது மெய்யொடு கூடி ஈறாமாறு மேற்கூறுதலான் ஈண்டுக் கூறியது தனித்து ஈறாக நிற்கும் நிலையை என்பது புலனாம்.