சூ. 7 :

கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை 

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே  

(7)
 

க-து: 

மாத்திரை என்னும் ஓசையளவிற்கு விளக்கங் கூறுகின்றது.
 

பொருள்:கண்     இமைத்தற்குரிய     கால   எல்லையும்,    கைந்
நொடித்தற்குரிய   கால எல்லையும் ஆகிய அளவையே ஒரு மாத்திரையின்
அளவாகும்  என்பது ஓசையளவினை நுட்பமாக உணர்ந்தோர் கண்டுரைத்த
நெறியெனக்   கூறுவர்   புலவர்.
 

கண்ணிமை-நொடி,   என்பவை   அவை   நிகழும்   கால எல்லையை
உணர்த்திநிற்றலின் ஆகுபெயர்.  ‘என்மனார் புலவர்’ என்பது அதிகரித்தது:
எழுவகையளவையுள் இது சார்த்தியளத்தலின் பாற்படும். எண்ணின்கண்வந்த
‘என’ என்பதனைக் கண்ணிமை என்பதனொடும் கூட்டிக்கொள்க.
 

இயற்கையும்   செயற்கையுமாதல்  பற்றி இரண்டு மேற்கோள்  கூறினார்.
மற்று, முன்னையது   கால    அளவையும்  பின்னையது  ஓசையளவையும் குறிக்கும்   என்பார் ஒருசாரார். இங்ஙனம் இசையளவினை மாத்திரை எனக்
குறியீடு   செய்தது,   பின்னர்   ஆளுதற்   பொருட்டென்க.   மாத்திரை
என்பது   மா-(திறம்)   திரம்-என்பவை   இணைந்ததோர்  ஒட்டுப் பெயர்.
மா-அளவு திரம்-நிலை