சூ. 71 :எஎன வருமுயிர் மெய்யீ றாகாது 
(38)
 

க-து: 

எகர உயிர் பற்றியதொரு விதி கூறுகின்றது. ஐயமகற்றுதலுமாம்.
 

பொருள்:  எ   எனப்படும்    உயிர்எழுத்து     மெய்யொடு    கூடி
மொழியீறாகவராது.
 

அளபெடையாக ஈறாகும் என்பது கருத்து. ‘‘ஈற்றுநின் றிசைக்கும்  ஏஎன்
இறுதி, கூற்றுவயின் ஓரள பாகலும் உரித்தே’’ (இடையியல்-38) என்பதனான்
“மெய்யோடுகூடி  ஈறாகுங்கொல்’’  என்னும்  ஐயம் நீங்க,  ‘ஆகாது’  என
வலியுறுத்தியவாறு.