க-து:
பொருள்: மேற்கூறிய எகரமேயன்றி ஒகரமும் நகர மெய்யொடுகூடிவருதலல்லாத இடத்து அவ்விலக்கணத்ததேயாகும். என்றது; ஒகரம்நகரமெய்யொடு கூடியல்லது பிற மெய்களொடுகூடி மொழியிறுதிக்கண்வாராதென்றவாறு.
எ - டு : நொக்கொற்றா-நொஅலையல் எனவரும்.