எ - டு: நகு, உசு, கடு, அணு, அது, தபு, உருமு, உரு, கமு, உறு, மின்னு எனவும் நகூ, முசூ, உடூ, என்னூ, தூ, பூ, கொண்மூ, பரூ, பழூ, உறூ எனவும் வரும். இவற்றுள் பெயர் அல்லாதன விளிப்பெயரும், எச்சவினைகளுமாம். ஏனைய வந்துழிக் காண்க. |
நவவொடும் எனப் புணர்ச்சிவிகாரத்தாற் குன்றிய எச்ச உம்மையை விரித்து, மேற்கூறிய ஞகரத்தொடும் நவிலா என்க. உரிஞு, பொருநு, கதவு, வரவு, செலவு என்பவை உகரச்சாரியை பெற்ற விதியீறுகளாகும். இனி, வரவு, செலவு, கனவு, புரவு முதலாயவற்றை இயல்பீறாகக் கருதி உரையாசிரியன்மார் உகரம் வகரத்தொடு ஈறாதலை ‘‘நவிலா’’ என்னும் மிகையாற்கொள்க என்பர். இவையாவும் விதியீறுகளாதலின் அவர் கருத்து ஒவ்வாதென்க. |