சூ. 75 :உச்ச காரம் இருமொழிக் குரித்தே
(42)
 

க-து:

தடுமாறாமல்   முற்றியலுகரமாகவரும்   உச்சகாரம்   இரண்டே
என்கின்றது.
 

பொருள்: சகரத்தொடு  கூடிவரும்  முற்றியலுகரம்  இரு  சொற்களுக்கு
உரித்தாகும்.
 

எ - டு:  உசு, முசு எனவரும். பசு, வசு முதலியவை ஆரியச்சொற்கள்.
 

அரசு, முரசு என்றாற்போலவரும்  ஏனையவை,  புணர்மொழி  நோக்கி
முற்றியலுகரமாயும் குற்றியலுகரமாயும்  நிற்றற்கேற்பன வாதலின்  திரிபின்றி
முற்றுகரமாக வருவன இவை இரண்டுமே என வரையறை கூறினார்.