சூ. 78 :

ஞணநம னயரல வழள என்னும்

அப்பதி னொன்றே புள்ளி யிறுதி

(45)
 

க-து: 

புள்ளியாகிய மெய்யெழுத்துக்களுள் மொழிக்கீறாவன கூறுகின்றது.
 

பொருள்: ஞண   நமன   யரல   வழள   என்னும்   அப்பதினொரு
புள்ளிமெய்களே  மொழியிறுதியாக வரும். ஏகாரம் தேற்றம்.
 

எ - டு: உரிஞ்,  விண்,  வெரிந்,  வளம்,  வான், செய், வேர்,  வேல்,
தெவ், யாழ்,  வேள் எனவரும்.   வெரிந்   என்பது  வெந் எனவும் வரும்.
மெல்லெழுத்தாதல் இனம்பற்றி னகரத்தை இடையே சேர்த்துக் கூறினார்.