அகரமுதல் என்பது முதற்சூத் திரத்தினின்று தந்துரைக்கப் பெற்றது. ‘‘பன்னிருகையும் பாற்பட இயற்றி’’ என்புழிப் போல முற்றும்மைமாறி நின்றது. இவற்றை ‘‘ஆவி’’ எனப் பெயரிட்டுக் கூறுதல் பிறழ்வுணர்ச்சியாகும். உயிர் போறலின் உயிர் எனப்பட்டது என்பதும், அஃது உவம ஆகுபெயர் என்பதும் அத்தகையனவேயாம். உயிர்-(உய்+இர்) உயிர்த்தலை உடையது என்பது இதன்பொருள். (பிறவிளக்கங்களை எழுத்துக்களின் குறியீட்டு விளக்கம் என்னும் தனிக்கட்டுரையிற் கண்டு கொள்க.) |