சூ. 80 :உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே

அப்பொருள் இரட்டாது இவணை யான
(47)
 

க-து: 

ஞகரப்புள்ளி ஒரு சொல்லில் மட்டுமே ஈறாகவரும் என்கின்றது.
 

பொருள்:ஞகாரம்  மேற்கூறிய  பகரஉகரத்தொடு  ஒத்த நிலைமைத்து,
ஆயினும் இது அதுபோலப் பொருள் இரண்டாகாது. என்றது;  ஞகரப்புள்ளி
தபு என்பதுபோல ஒருசொல்லில் மட்டும் ஈறாகவரும்.  எனினும் அதுபோல
இது இருபொருள் தாராது என்றவாறு.
 

‘அப்பொருள்’ என்றது அதுபோல என்னும் பொருட்டாய்  நின்றது. இவ்
ஆடையும் அந்நூலானியன்றது என்புழிப்போல  என்க. இவனை  என்பதில்
ஐகாரம் சாரியை.
 

எ - டு :  உரிஞ் எனவரும்.
 

உவமப்படுத்து    மாட்டேற்றுதற்பொருட்டு   நகரத்தை   முற்கூறினார்.
நகரஞகர  ஈற்றனவாய்ச்  செய்யுளீட்டச்  சொல்லாக  வடசொற்  கிளவிகள் விரவுங்கால் தமிழ்ச் சொற்கள் இவையே  என  அறிதற்பொருட்டு இவற்றை எடுத்தோதினார் என்க.