|
சூ. 81 : | வகரக் கிளவி நான்மொழி ஈற்றது | (48) | க-து: | வகரப்புள்ளி நான்கு சொற்களில் ஈறாகவரும் என வரையறை கூறுகின்றது. | பொருள்: வகரமாகிய புள்ளிஎழுத்து நான்கு சொற்களை ஈறாக உடையதாகும். | எ - டு : அவ், இவ், உவ், தெவ் எனவரும். | கதவு, புதவு, வரவு என்றாற்போல வருவனவற்றுள் இறுதி உகரம் சாரியை என்பதை உணர்ந்தோரும் இவை வகரஈறாம் கொல்? எனமயங்குதலின் ஆண்டு நிற்கும் வகரமெய் சாரியை உகரத்தை ஏற்கவந்த உடம்படுமெய் என்பதை உணர்த்த வகர ஈற்றுச் சொற்களை வரையறுத்தோதினார் என அறிக. |
|