அவ்வழிப்,
பன்னீ ருயிரும் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்
க-து:
பொருள்:மேற்கூறிய நெறிமுறைமையான் உயிர்எழுத்துப் பன்னிரண்டும்தம்தன்மை திரியாவாய் மிடற்று வளியினாற் பிறந்திசைக்கும்.தம்நிலையாவது குறில், நெடில், மாத்திரையளவு ஆகிய தன்மைகளாம்.வினைக்கள முயற்சி மேற்கூறுவார்.