சூ. 91 :டகார ணகாரம் நுனிநா அண்ணம்
(9)
 

க-து: 

இதுவுமது.
 

பொருள்: டகாரம் ணகாரம் என்னும் மெய்யெழுத்துக்கள் நுனிநா நுனி
அண்ணத்தைப் பொருந்தப்பிறக்கும்.
 

‘‘தத்தம் திரிபே சிறிய’’ என்றதனான் நாச்சிறிது உள்வளைதல் கொள்க.