சூ. 95 :நுனிநா அணரி அண்ணம் வருட

ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்
(13)
 

க-து:

மெய்களுள் ரகரழகரங்கட்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்:ரகரம் ழகரம் ஆகிய இரண்டு மெய் எழுத்துக்களும், நாவின்
நுனி, மேல்நோக்கி அசைந்தெழுந்து அண்ணத்தை வருடப் பிறக்கும்.
 

‘‘தத்தம்   திரிபே   சிறிய’’   என்பதனான்   ழகரத்திற்கு   நாச்சிறிது
உள்வளைதல் கொள்க.