பொருள்: லகாரம் ளகாரம் ஆகிய இரண்டு மெய்யெழுத்துக்களும் முறையே நாவினது விளிம்பு அண்பல்லின் அடிப்பகுதியை நெருங்கி அவ்விடத்து அண்ணத்தைப் பொருந்தி நிற்கவும், வருடவும் பிறக்கும்.
நாநுனி அண்பல்முதலை உற்றபின் அஃது அண்ணத்தை ஒற்றுதற்கும் வருடுதற்கும் இயையாதாகலின் ஒற்ற முயலும் நிலையை ‘‘உற’’ என்றார். அஃது விளக்குவர இருள் நீங்கிற்று என்பது போல நின்றது.