சூ. 97 :இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்
(15)
 

க-து:

பகரமகரங்கட்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்:பகரம்   மகரம்    ஆகிய    மெய்யெழுத்துக்கள்   கீழிதழ்
மேலிதழைப் பொருந்தப் பிறக்கும். செயவென் எச்சம் திரிந்து நின்றது.