(16)
பொருள்:வகரமெய் மேற்பல்லின் முற்பகுதியைக் கீழ்இதழ்சிறிதுமடங்கிச் சென்று பொருந்தப்பிறக்கும்.
பல்இதழ் எனப்பொதுவில் நின்றவேனும் ஏற்புழிக்கோடலான் மேற்பல், கீழிதழ் எனக்கொள்க . இதழ் சிறிது மடங்குதலும் அதனானே கொள்க. இம்மூன்றினையும் இதழ்வழி மெய் எழுத்தென்பர் மொழி நூலார்.