சூ. 99 :அண்ணம் சேர்ந்த மிடற்றெழு வளியிசை

கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும் 
(17)
 

க-து : 

எஞ்சிநின்ற யகரமெய்க்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்:யகரமெய்,     அண்ணத்தைச்     சேர்ந்த,   மிடற்றெழும்
வளியிசையானது விளிம்புற்று நிற்கும் அடிநாவினை நெருங்கிப்  பொருந்தப் பிறக்கும்.
 

அண்ணம் சேர்ந்த வளியிசை எனக்கூட்டுக.  ‘‘மிடற்றெழுந்த’’  என்பது இனஞ்சுட்டி   இயைபுநீக்கவந்த   அடைமொழி.   கண்ணுறுதல்   =   மிக
நெருங்குதல்.   கண்ணுற்று   அடைய   என்பதற்கு    அவாய்நிலையான்,
விளிம்புற்று நிற்கும் அடிநா என்பது செயப்படுபொருளாக வந்தது.
 

மெய்யெழுத்துக்கள்   செயலுறுப்புக்கள்    தொழிற்பட்ட   வழியல்லது
பிறவாமையான், மிடற்றெழுவளியிசையான் மட்டும்  பிறக்குமெனின்  அஃது மேற்கோள்    மலைவாம்.   வளியிசையான்  மட்டுமே  பிறப்பின்  அஃது
உயிரெழுத்தாவதல்லது மெய்யாகாதென அறிக.