சூ. 100 : | அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் |
| நிச்சமும் பெண்பாற் குரிய என்ப |
(8) |
க - து : | அகனைந்திணைக்குரிய தலைமகளது இயல்பாமாறு கூறுகின்றது. |
பொருள் :அச்சமும், நாணமும், மடனும் முதன்மைபெற்று நிகழ்தல் எஞ்ஞான்றும் தலைமகளுக்குரிய இயல்புகளாம் எனக் கூறுவர் புலவர். |
இவை முந்துறுதல். எனவே அவற்றைச் சார்ந்து நிற்பன பிறவும் உள. அவையும் தலைமகளுக்குரிய என்பது பெறப்படும். அவையாவன :பயிர்ப்பும், பேதைமையும், பொறையும் பிறவுமாம். |
அச்சமாவது; அன்புகாரணமாகத் தோன்றும் உட்கு. நாணமாவது : பெண்மைக்குப் பொலிவுதரும் உள்ளப்பாங்கு, மடனாவது: செவிலி முதலானோர் உணர்த்துவனவற்றை ஆராயாது மேற்கொள்ளுதலும் அங்ஙனம் கொண்டவற்றை இறுகப்பற்றி யொழுகுதலுமாம். |
பயிர்ப்பாவது: பயிலாதவற்றின் மேற்கொள்ளும் அருவருப்பு, பேதைமையாவது; பிள்ளைத்தன்மை, பொறையாவது: வறுமை முதலாயவற்றைப் பொறுத்தொழுகுதல். |
|