சூ. 122 : | அவன்வரம் பிறத்தல் அறந்தனக் கின்மையின் |
| களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும் |
| தான்செலற் குரியவழி யாக லான |
| |
க - து :
| தாமே தூதுவராகுமிடத்துத் தலைவிக்குரியதோர் இலக்கணம் கூறுகின்றது. |
பொருள் :தலைவன் உறையும் எல்லைக்கண் சென்று சேர்தல் களவின்கண் தலைவிக்கு அறநெறியின்மையான் கூட்டத்திற்குரிய களம் (குறியிடம்) குறித்துக் கூறுதல் தலைவியின்கண்ணதாகும். காரணம் அக்களம் தான் செல்லுதற்குப் பயின்றமைந்த வழி ஆகலான். |
"விரியிணர் வேங்கை" என்னும் அகப்பாட்டுள் "கூஉம் கண்ணதுஎம் ஊர்என ஆங்கதை அறிவுறல் மறந்திசின் யானே" எனக் களஞ்சுட்டும் தன் உரிமையைப் புலப்படுத்தியவாறு கண்டுகொள்க. |