சூ. 130 :

அன்ன வகையான் உணர்ந்தபின் னல்லது

பின்னிலை முயற்சி பெறாள்என மொழிப

(38)
 

க - து :

இதுவுமது.
 

பொருள் :  மேற்கூறிய           முறைமையானே     இருவரது
மறையொழுக்கத்தினை   நன்கு  உணர்ந்த பின்னன்றித் தலைவன் தன்பால்
வந்து இரந்து பின்னின்ற குறையை முடித்தற்பொருட்டுத் தலைவியை இரந்து
குறைநயப்புறுத்தும் முயற்சியைத் தோழி  மேற்கொள்ளாள்  எனக்  கூறுவர்
நூலோர்.