சூ. 141 : | அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின் |
| அங்கதன் முதல்வன் கிழவ னாகும் |
(49) |
க - து : | களவொழுக்கம் புறத்தார்க்குப் புலப்படுமாறும் அதற்குக் காரணம் ஆமாறும் கூறுகின்றது. |
பொருள் : அயலவர் நிகழ்த்தும் அம்பலும் தூற்றும் அலரும் தலைவியது களவொழுக்கத்தைப் பிறரறியப் புலப்படுத்தும். அவை அங்ஙனம் புலப்படுத்தலான் அதற்குக் காரணமாவான் தலைவனாவான். |
இரவுக்குறிக்கண்ணும் பகற்குறிக்கண்ணும் வந்து செல்வானைக் காண்டலான் களவு புலப்பாடாகும் என்க. |
எ - டு : | "நீர்ஒலித் தன்ன பேஎர் |
| அலர்நமக் கொழிய அழப்பிரிந் தோரே". |
(அகம்-211) |
என்பதனான் தலைவன் காரணமாதல் அறிக. |