சூ. 161 : | அவன்குறிப் பறிதல் வேண்டியும் கிழவி |
| அகமலி ஊடல் அகற்சிக் கண்ணும் |
| வேற்றுமைக் கிளவி தோற்றவும் படுமே |
(18) |
க - து : | ஊடற்காலத்து நிகழ்த்தும் தலைவி கூற்றிற்குரியதோர் இயல்பு கூறுகின்றது. |
பொருள் : தலைவனது உள்ளக்குறிப்பினை அறிய வேண்டிய விடத்தும் தன் மனத்தே நிறைந்து நின்ற ஊடல் நீங்குதலைச் செய்யுமிடத்தும் தலைவற்குத்தான் வேறாயவள் போல அயன்மைப்படுத்துங் கூற்றினைத் தலைவி தோற்றுவிக்கவும் பெறும். |
எ - டு : | யாரைநீ எம்மிற் புகுதர்வாய், ஓரும் |
| புதுவமலர் தேரும் வண்டேபோல் யாழ |
| வதுவை விழவணி வைகலும்காட்டினையாய் |
| மாட்டுமாட்டு ஓடி மகளிர் தரத்தர |
| பூட்டுமான் திண்டேர் புடைத்தமறுகெல்லாம் |
| பாட்டாதல் சான்ற நின்மாயப் பரத்தைமை |
| காட்டிய வந்தெமைக் கைப்படுத்தேன் பண்டெலாம் |
| கேட்டும் அறிவேன் மன்யான்" |
(கலி-98) |
இதன்கண் ‘யாரை நீ’ என அயன்மைப்படுத்தியவாறு காண்க. |