சூ. 163 : | அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி |
| பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே |
க - து : | தலைவிக்குரியதோ ரியல்பு கூறுகின்றது. |
பொருள் :அருளை முதன்மையாக உடைய அன்பினை உட்பொதிந்த சொற்களான் தான் கருதும் பொருள் விளங்கக் கூறுதல் தலைவிக்கு உரியதாகும். |
எ - டு : | ஆங்க, கடைஇய நின்மார்பு தோயலம் என்னும் |
| இடையும் நிறையும் எளிதோ நிற்காணின் |
| கடவுபு கைத்தாங்கா நெஞ்சென்னும் தம்மொடு |
| உடன்வாழ் பகையுடையார்க்கு" (கலி-77) எனவரும். |