சூ. 165 : | அலரிற் றோன்றும் காமத்து மிகுதி |
(22) |
க - து : | அலர் எழுதலான் எய்தும் பயன் கூறுகின்றது. |
பொருள் :அலர் காரணமாகத் தலைவன் தலைவியரிடத்துக் காதற் காம உணர்வு மிக்கு விளங்கும். |
எ - டு : | ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் |
| நீராக நீளும்இந் நோய் |
(குறள்-1147) |
| நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றாற் கௌவையாற் |
| காமம் நுதுப்பேம் எனல் |
(குறள்-1148) |
கௌவை = அலர். என்றாங்குக்காண்க. |