சூ. 138 :

ஆற்றினது அருமையும் அழிவும் அச்சமும்

ஊறும் உளப்பட அதனோ ரற்றே

(46)
 
க - து :

 இதுவுமது.
 

பொருள் : குறியிடத்திற்குச்   செல்லும்  நெறியினது  அரிய நிலையும்,
அழிதகவிற்குரிய பிறநிலைகளும், காவல் மிகுதியான்  உளதாகும் அச்சமும்,
விலங்கு முதலியனவற்றான் நேரும் ஊறும் உட்பட  இவை எல்லாம் ஆகா
எனக்  கூட்டத்தைத்  தவிர்ந்து ஒழுகும்  ஒழுக்கம்   தலைவற்கு  இல்லை.
‘துறந்த ஒழுக்கம் அதனோ ரற்றே’ என வருவித்து முடித்துக் கொள்க.
 

இவ்விரண்டு சூத்திரத்தானும்  இயற்கை நிகழ்வுகளான் வரும் இடையூறு
கருதி   களவின்கண   கூட்டத்தைத்   துறந்து   ஒழுகுதல் தலைவன்கண்
இல்லையென       அவன்றன்      காமச்சிறப்பும்    காதற்கேண்மையும்
வலியுறுத்தப்பெற்றன.