சூ. 157 :

இடித்துவரை நிறுத்தலும் அவர தாகும்

கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின்

(14)
 

க - து :

அறிவர் கூற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
  

பொருள் :  மனையறக்கிழமை  பூண்ட தலைவனும்  தலைவியும்  அவ்
அறிவர்  வகுத்த  நெறியை  வரம்பாகக்  கோடலின்  அந்நெறியை  அவர்
வழுவிய  காலை இடித்துரைத்து  அவ் எல்லைக்கண் நிறுத்தலும் அறிவரது
கடமையாகும்.
 

எ - டு :

உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்

தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி

விழவொடு வருதி நீயே இஃதோ

ஓரான் வல்சிச் சீறில் வாழ்க்கைப்

பெருநலக் குறுமகள் வந்தென

இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே

(குறு-295)
 

இது தலைவனைக் கழறியது.
 

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.

(குறள்-52)
 

இது தலைவியைக் கழறியது.