சூ. 173 :

உழைக்குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர்

நடக்கை யெல்லாம் அவர்கட் படுமே

(30)
 

க - து :

இளையோரது  பண்பும்,  செயலும்  காரணமாக அவரது சிறப்புக்
கூறுகின்றது.
 

பொருள் :உழையிருந்து   குற்றேவல்  புரிதலும்,  காவல்  புரிதலும்
உயர்ந்தோர் ஒழுக்கமாகிய நன்னடக்கையும் ஆகியவெல்லாம் இளையோர்க்
கண்ணவாய் விளங்கும்.
 

இளையராயினும்  பிழைபட  ஒழுகார்  என்பது  விளங்க  "உயர்ந்தோர்
நடக்கை  யெல்லாம்  அவர்கட்படும்"  என்றார். எடுத்துக்காட்டு  வந்துழிக்
கண்டுகொள்க.