சூ. 204 : | உடம்பும் உயிரும் வாடியக் காலும் |
| என்னுற் றனகொல் இவையெனின் அல்லதை |
| கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை |
(8) |
க - து : | இதுவுமது. |
பொருள் :தன்மேனியும் ஐம்புலத்துணர்வும் தேய்ந்து மெலிவுற்றபோதும் இவை உற்றதுயர் என்கொல்? என அவற்றிற்கு இரங்குவாள் போலக் கூறினல்லது தலைவன் உறையும் இடம் நாடிச்செல்லுதல் தலைவிக்குப் புலனெறி வழக்கு ஆமாறில்லை. |
எ - டு : | கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் |
| இதுநகத் தக்க துடைத்து |
(குறள்-1173) |
எனவரும் |
| ஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் |
| தாஅம் இதற்பட் டது. |
(குறள்-1176) |
என்பன இதன்பாற்படும். |