சூ. 209 : | உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின் |
| அப்பொருள் வேட்கைக் கிழவியின் உணர்ப |
(13) |
க - து : | களவொழுக்கமாகிய பொருள் புலப்பாடு அதிகாரப்பட்டமையான் தலைவியது களவினை ஓராற்றான் அறிந்தல்லது இற்செறிப்பும், வெறியாட்டெடுத்தலும் பிறவும் நிகழ்த்தாராதலின் தோழியையின்றித் தாயர் தாமேயும் உணர்வர் என்பதும் அவர் உணருமாறும் பற்றிக் கூறுகின்றது. |
பொருள் :வெறியாட்டெடுத்தல் முதலாக யாதானும் ஓர் இடையூறு நிகழும் வழியல்லது அறத்தொடு நிலை வகையான் தன்னிலையைத் தலைவி கூறல் மரபன்மையான் களவின்வழி யொழுகும் அவள் விருப்பத்தை அவள் ஒழுகுமாற்றான் செவிலியும் நற்றாயும் உணர்ந்து கொள்வர். |
உணர்த்தாதவிடத்துச் செவிலியும் நற்றாயும் கட்டும், கழங்கும் காணுதல், வெறியாட்டெடுத்தல் முதலியவை நிகழ்த்துமாறு யாங்ஙனம் என்னும் ஐயத்தை உட்கொண்டு தோழி உணர்த்தா வழியும் தலைவியினது மேனி வேறுபாட்டானும் பிற நிலைமைகளானும் உணர்ந்து கொள்வர் எனத் தாயர் தம் ஆய்வறிவையும் பொறுப்புணர்வையும் சுட்டி உணர்த்துகின்றது. |