சூ. 214 : | உண்டற் குரிய வல்லாப் பொருளை |
| உண்டன போலக் கூறலும் மரபே |
(18) |
க - து : அகத்திணை மாந்தர் கூற்றினுள் இசை திரிந்திசைக்கும் ஒருசார் சொற்பொருண்மை கூறுகின்றது. |
பொருள் :உண்டல் - தின்றல் முதலிய தொழில்களை நிகழ்த்துதற்குரிய வல்லாத பொருள்கள் உண்டல் முதலாய தொழில்களைப் புரிவனபோலக் கூறலும் அகவொழுகலாற்றின்கண் மரபாகும். |
எ - டு : | பசலையால் உணப்பட்டுப் பண்டை நீரொழிந்தக்கால் |
(கலி-15)
|
எனவரும். |
| கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் |
| தின்னும் அவர்க்காண லுற்று |
(குறள்-1244) |
என்பதுமது. |