சூ. 240 :உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலின்

உரிய தாகும் தோழிகண் உரனே
(44)
 

க - து :

தோழிக்கு   எய்தியதன்மேல்  நிகழ்வதொரு   சிறப்பிலக்கணம்
கூறுகின்றது.
 

பொருள் :  உரனுடைமை    பெண்பாற்குரிய   இலக்கணமன்றாயினும்
தலைமக்கட்குக்   கூறும்  இடையூறுகளை  உறாமற்  களைந்து   அவரைப்
போற்றுதல் தோழிக்குரிய  இயல்பாதலின்   அதற்குக்  கருவியாகும். உரன்
என்னும்  அறிவுத்திண்மை  தோழியிடத்தும் உரியதாகும். ‘தோழிகண்ணும்‘
என்னும் உம்மை விகாரத்தாற் றொக்கது.
 

எ - டு :

பால்மருள் மருப்பின்’ என்னும் பாலைக்கலியுள்

"பொருள்வயிற் பிரிதல் வேண்டும் என்னும்

அருளில் சொல்லும் நீசொல் லினையே

நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி

நின்னிற் பிரியலென் அஞ்சல் ஓம்புஎன்னும்

நன்னர் மொழியும் நீமொழிந் தனையே

அவற்றுள் யாவோ வாயின - மால்மகனே

கிழவோர் இன்னோர் என்னாது பொருள்தான்

பழவினை மருங்கின் பெயர்புபெயர்பு உறையும்

அன்ன பொருள்வயிற் பிரிவோய்"

(21)
 

என உரனொடு இடித்துக் கூறியவாறு கண்டுகொள்க.