சூ. 241 :உயர்மொழிக் கிளவியும் உரியவா லவட்கே
(45)
 

க - து :

இதுவும் அது
 

பொருள் : உறுகண்  ஓம்புதலேயன்றித் தலைவனையும் தலைவியையும்
உயர்த்துக் கூறும் கிளவியும் தோழிக்குரியதாக வரும்.
 

"தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை

நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்

மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம்

அணங்கென அஞ்சுவர் சிறுகுடி யோரே"

(கலி-52)
 

இது தலைவனை உயர்த்துக் கூறியது.
 

யாயா கியளே விழவுமுத லாட்டி

பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சி ஊரன் கொடுமை

கரந்தனள் ஆகலின் நாணிய வருமே

(குறு-10)
 

இது தலைவியை உயர்த்துக் கூறியது.
 

பொதுப்படக் கூறியதனான் தாயரை உயர்த்துக் கூறுதலும் கொள்க.