சூ. 312 : | உவமத் தன்மையும் உரித்தென மொழிப |
| பயனிலை புரிந்த வழக்கத் தான |
(36) |
க - து : | உவமத் தன்மையும் உவமத்தோற்றமாதற்கு ஒக்கும் என்கின்றது. |
பொருள் :உவமத்தைப் பொருளொடு உவமித்துக் கூறுதலான் எய்தும் பயனைச் செய்த முறைமையான் உவமத்தன்மையும் உவமத்தோற்றமாதற்கு உரித்தெனக் கூறுவர் நூலோர். என்றது; உவமத்திற்கும் பொருளுக்கும் உரிய பொதுத்தன்மையைச் சிறப்பித்துச் சுட்டிக்கூறினும் அஃது உவமத் தோற்றமேயாம் என்றவாறு. |
எ - டு : | பாரி பாரி என்றுபல வேத்தி |
| ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் |
| பாரி ஒருவனு மல்லன் |
| மாரியும் உண்டீண்டு உலகுபுரப் பதுவே |
(புறம்-) |
| தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் |
| தாமரைக் கண்ணான் உலகு |
(குறள்-1103) |
எனவரும். உலகைப் புரத்தல் பாரிக்கும் மாரிக்கும் உரித்து என உவமத்திற்கும் பொருளுக்கும் உரிய பொதுத்தன்மையைச் சுட்டிக் கூறி மாரியை ஒப்பான் பாரி என உவமங் கொள்ள வைத்தமையான் பயனுவமம் தோன்றுமாறு கண்டு கொள்க. தாம் வீழ்வார் மென்தோளுக்கும் தாமரைக்கண்ணான் உலகிற்கு பொதுத்தன்மையாகிய இன்பத்தை உவமத்தன்மையாக அமைந்து தாமரைக்கண்ணான் உலகொக்கும் தாம் வீழ்வார்மென்றோள் எனப் பயனுவமங்கொள்ள வைத்தமை கண்டுகொள்க. ஆக இவ்வாறு வருவனவும் உவமத்தோற்றமே யென்றவாராம். |