எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப
க - து :
பொருள் : தலைவன் தலைவியாகிய இருவரிடத்தும் பார்ப்பார்முதலாய வாயிலோர் கூறும் வாயிலுரையெல்லாம் அவர்க்குப் பொருந்தியமகிழ்ச்சி தரும் பொருளினவாகும் எனக் கூறுவர் புலவர். தலைமக்கட்குமகிழ்ச்சி தருவனவற்றையே வாயிலார் வாயிலாக உரைப்பர் என்பதுகருத்து.