எ - டு : | "எல்லா இஃதொத்தன்" என்னும் குறிஞ்சிக்கலியுள் |
| பல்லார்நக் கெள்ளப் படுமடல் மாவேறி |
| மல்லலூர் ஆங்கண் படுமே நறுநுதல் |
| நல்காள் கண்மாறி விடினெனச் செல்வானாம் |
| எள்ளி நகினும் வரூஉம் இடையிடைக் |
| கள்வர் போல நோக்கினும் நோக்கும் |
(கலி-61) |
எனவரும். இதனுள் எள்ளிநகினும் வரூஉம் எனத்தான் எள்ளியவாறும், ‘பல்லார்நக்கெள்ள’ எனப்பிறர் எள்ளியவாறும் பற்றித் தோழிக்கு நகைதோன்றியவாறு கண்டுகொள்க. |
2. இளமையாவது : அகவைசாலா மழவுத்தன்மை. இது பண்பு பற்றிய செயல். இதுவும் இருபாலும் பற்றி வரும். |
எ - டு : | திறனல்ல யாங்கழற யாரை நகுமிம் |
| மகனல்லான் பெற்ற மகன் |
(கலி-86) |
இது தனது இளமைபற்றித் தோன்றிய நகை. |
| நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் |
(அகம்-16) |
இது பிறர் இளமை காரணமாகப் பிறந்த நகை. |
3. பேதைமையாவது : விளைவறியா வளமில்அறிவு. கேட்டதனை உய்த்துணராது மெய்யாகக் கோடல் என்பார் இளம்பூரணர். இதுவும் பண்பு பற்றிய செயலாம். இதுவும் இருபாலும் பற்றிவரும். |
எ - டு : | நகைநீ கேளாய் தோழி |
(அகம்-248) |
இது, தன்பேதைமை காரணமாகப் பிறந்த நகை. |
| நகையா கின்றே தோழி |
| மம்மர் நெஞ்சினன் தொழுதுநின் றதுவே |
(அகம்-56) |
இது, பிறர்பேதைமை காரணமாகத் தோன்றிய நகை. |
4. மடனாவது :வெள்ளறிவு. கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்பார் உரையாசிரியர். இதுவும் பண்பு பற்றியதாகும். இதுவும் இருபாலும் பற்றிவரும். |
எ - டு : | குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் |
| சிறக்கணித்தாள் போல நகும் |
(குறள்-1095) |
இது தனது மடப்பங் காரணமாகப் பிறந்த நகை. |
| நாம்நகை யுடையம் நெஞ்சே நம்மொடு |
| தான்வரு மென்ப தடமென் றோளி |
(அகம்-121) |
இது பிறர் மடப்பம் பற்றித் தோன்றிய நகை. |