சூ. 162 : | காமக் கடப்பினுள் பணிந்த கிளவி |
| காணுங் காலைக் கிழவோற் குரித்தே |
| வழிபடு கிழமை அவட்கிய லான |
(19) |
க - து : | தலைமகட்குரிய தோரியல்பு தலைமகற்காகும் இடம் கூறுகின்றது. |
பொருள் :தலைவனை வழிபட்டுப் பணிமொழி கூறி ஒழுகுதல் மனையறத்தை மேற்கொண்டொழுகும் தலைவிக்கு இயல்பாகலான் (அவள் பணிமொழி காமவேட்கையான் நிகழ்வதன்று) காம வேட்கை இகந்த விடத்து நிகழும் பணிந்த மொழி ஆராயுமிடத்துத் தலைவற்கு உரியதாகும். |
என்றது : காமங்கையிகந்தவிடத்துக் கிழவோன் தன் தலைமை நோக்காது தலைவியைப் பணிந்தொழுகுதல் கற்பின்கண் உரித்தாகும் என்றவாறு. |
எ - டு : | ஒரூஉ, கொடியியல் நல்லார் என்னும் மருதக்கலியுள் |
(88) |
| "ஆயிழை |
| நின்கண்பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா |
| என்கண் எவனோ தவறு" எனவும் |
| "அதுதக்கது |
| வேற்றுமை என்கண்ணோ ஓராதி தீதின்மை |
| தேற்றக்கண் டீயாய் தெளிக்கு" எனவும், |
| தலைவன் பணிமொழி கூறியாறு கண்டு கொள்க.
|