சூ. 166 :கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே
(23)
 

க - து :

காமமிகுதி     தோன்றுதற்கு     மற்றுமொரு    காரணமாமாறு
கூறுகின்றது.
 

பொருள் :  தலைவன்  பரத்தையரொடு  ஆடலும்,  பாடலும், யாறும்,
குளனும்   படிந்து   நீராடலும்  ஆகிய  விளையாட்டினை மேற்கொள்ளும்
அவ்விடத்தும் காதற்காம உணர்வு மிக்குத் தோன்றும்.
 

எ - டு :

"எஃகுடை எழில் நலத் தொருத்தியொடு நெருநை

வைகுபுன லயர்ந்தனை என்ப அதுவே

பொய்புறம் பொதிந்து யாம்கரப்பவும் கையிகந்து

அலரா கின்றாற் றானே"

(அக-116)
 

என வருதல் காண்க.