சூ. 235 : | கிளவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக் |
| கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள் |
(39) |
க - து : | தலைவி கூற்றின்கண் அமையுமொரு திறன் கூறுகின்றது. |
பொருள் : தலைவி பிறள் ஒருத்தியின் குணங்கள் இத்தன்மையன எனக் கூறுமுகத்தான் அவள்மாட்டுத் தலைவன் கொண்டுள்ள உளக்குறிப்பினை அறிதற்கும் உரியளாவாள். |
பரத்தையை ஏத்துதலேயன்றிப் அவள் குணத்தைக் கூறித் தலைவன் குறிப்பினை உணரும் என நின்றமையின் உம்மை எச்சவும்மை இதனான் பரத்தையை ஏத்துதலும் தலைவன் குறிப்பினை உணரும் பயத்ததாதல் விளங்கும். |
எ - டு : | கண்டனெம் அல்லமோ மகிழ்நநின் பெண்டே |
| பலராடு பெருந்துறை மலரொடு வந்த |
| தண்புனல் வண்டல் உய்த்தென |
| உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே |
(ஐங்-69) |
எனக்கூறித் தலைவன் குறிப்பினை உணர முற்பட்டமை கண்டு கொள்க. |