சூ. 308 :கிழவோற் காயின் இடம்வரை வின்றே 
(32)
 

க - து :

தலைவற்குரிய மரபு கூறுகின்றது.
 

பொருள் :   உள்ளுறை    உவமம்   தலைவற்குரியதாயின்    இடம்
வரையறையில்லையாம்.
 

என்றது; தலைவி,  தோழி, பாங்கன், பாகன், பரத்தை, பாடினி,  பாணன்
என யாவர் மாட்டும் ஏற்புழித் தலைவன் உள்ளுறை உவமங்  கூறற்குரியன்
என்றவாறு.     எடுத்துக்காட்டு     மேற்காட்டியவற்றுள்ளும்   சான்றோர்
செய்யுட்களினும் கண்டு கொள்க.