பொருள் : களவின்கண்ணும் கற்பின்கண்ணும் அலர் எழா நின்றது எனக் கூறும் கூற்றுத் தோழிக்கும் தலைவிக்கும் நீக்கும் நிலைமையின்று. |
தோழி கூற்றும் தலைவி கூற்றும் அதிகாரப்பட்டு வருதலின் அவ்விருவரும் கொள்ளப்பட்டனர். |
எ - டு : | கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் |
| திங்களைப் பாம்புகொண் டற்று |
(குறள்-1146) |
இதுகளவு. |
| வேதின வெரிநின் ஓதி முதுபோத்து |
| ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும் |
| சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து |
| ஈங்கியான் தாங்கிய எவ்வம் |
| யாங்கறிந் தன்றிவ் அழுங்க லூரே |
(குறு-140) |
இதுகற்பு. இவை தலைவி கூற்று. |
| ‘கரும்பின் எந்திரம்’ என்னுங் ஐங்குறுநூறு |
(55) |
தோழி அலர் கூறியது. |