க - து :
பொருள் : செவிலி மகளாகிய தோழி கிழவன், கிழத்தி ஆகியஇருவரது நிலைமைகளை ஆய்ந்துணர்தலும் கிழத்திக்குஉசாத்துணையாதலும் ஆகிய தன்மைகளான் பொலிவுற்றுத் திகழ்வாள்.
பொதுப்படக் கூறியதனான் சிறுபான்மை செவிலிக்கும் தலைவற்கும்உசாத்துணையாதலும் கொள்க.