செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே
வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்
க - து :
பொருள் : ஓதல் முதலாய வினைக்கண் பிரிதலைக் கருதிய தலைவன்போதலைத் தவிர்ந்து இகழ்ந்திருத்தல் செல்லாமைக்குரியதன்று. அஃதுதலைவியை வற்புறுத்தி ஆற்றுவித்துப் பிரிதலைக் கருதுதலாகியதவிர்ச்சியாகும்.
‘அளிநிலை பொறா அது’ என்னும் அகப்பாட்டினுள்
"மணியுரு விழந்த அணியழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே ஒண்டொடி
உழைய மாகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே"
எனப் பின்னர் ஆற்றுவித்தலைக்கருதி அழுங்கியவாறு கண்டுகொள்க.