சூ. 156 : | சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய |
(13) |
க - து : | கற்பின்கண் அறிவர் கூற்று நிகழுமாறு கூறுகின்றது. |
பொருள் : மேற்கூறிய கிளவிகள் செவிலிக்கேயன்றி அறிவர்க்கும் உரியவாகும். |
எ - டு : | தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற |
| சொற்காத்துச் சோர்விலாள் பெண் |
(குறள்-55) |
| மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் |
| வளத்தக்காள் வாழ்க்கைத் துணை |
(குறள்-51) |
இவை நல்லவை யுரைத்தல். |
எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை |
அட்டிற் புகாதாள் அரும்பிணி - அட்டதனை |
உண்டி உதவாதாள் இல்வாழ்யேய் இம்மூவர் |
கொண்டானைக் கொல்லும் படை |
(நாலடி-363) |
இஃது அல்லவை கடிதல். |