சூ. 140 : | தாய்அறி வுறுதல் செவிலியொ டொக்கும் |
(48) |
க - து : | நற்றாய் தலைவி யொழுக்கத்தை அறியுமாறு கூறுகின்றது. |
பொருள் :தலைவியது களவொழுக்கத்தை நற்றாய் அறிந்துகொள்ளுதல் செவிலி அறிந்து கோடலொடு ஒக்கும். |
"தாய்க்கும் வரையார் உணர்வுடம் படினே’ என்றதனான் ஈண்டுச் செவிலியொடு ஒக்கும் என்றார். அங்ஙனம் மதியுடம்பட்டு உணராதவழிச் செவிலி அறத்தொடு நிற்றலான் உணரும் என்பது இதன் பயனாம். |
எ - டு : | "எனவாங்கு, அறத்தொடு நின்றேனைக் கண்டு திறம்பட |
| என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்" |
(கலி-39) |
என்பதனாற் கண்டு கொள்க. |